நயினார் தலைமையில் நாளை நடைபெறும் பாஜக மாநில மையக்குழு கூட்டம்

சென்னை தியாகராய நகரிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாளை (அக்.11) காலை 10 மணியளவில் கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். மாநிலத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல்கள், கட்சி அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕