பீகார் தேர்தலை தொடர்ந்து, பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும் தான் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற பொய்யை ஆளும்கட்சி தொடர்ந்து கட்டமைத்து வருகின்றது. ஆனால், அந்த பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது. பாஜக என்ற வார்த்தையை சொல்லாமல், யாரும் அரசியல் செய்ய முடியாது. 2026 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றம் நடக்கும்” என தெரிவித்துள்ளார்.