சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் குவித்து, SRH அணிக்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41வது லீக் போட்டி இன்று (ஏப்., 29) மும்பை வான்கெடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த MI அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்துள்ளது. 244 ரன்கள் இலக்குடன் SRH விளையாடவுள்ளது. புள்ளிப்பட்டியலில் மும்பை SRH அணி 4வது இடத்திலும், MI அணி 9வது இடத்திலும் உள்ளன.