டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா ஏஐ இம்பாக்ட்' உச்சிமாநாட்டின் போது இந்திய இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை கண்டித்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜகவினர் இன்று (பிப்.21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியினர் இடையூறு விளைவித்தது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
நன்றி:PT