கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி. புதூர் பகுதியில், பாஜக எம்.பி. ஹேமமாலினி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி குழுவினரின் கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. ஹேமமாலினி காருக்கு பின்னால் வந்த கார் மோதியதில் இரண்டு கார்கள் சேதமடைந்தன. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:TheFederal