உத்திரபிரதேச மாநிலம் கண்ணூஜ் நகரில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு முஸ்லிம் தொழிலாளர்களுடன் சென்று வழிபட்டதால் கோவில் தீட்டாகி விட்டதென பாஜகவினர் கோயிலை சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கோயிலை சுத்தம் செய்து "மகாதேவ்" என்று கோஷங்களை எழுப்பினர். சித்பீத் பாபா கௌரிசங்கர் கோவிலில் நடந்த இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.