டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பாஜக மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடுகள் குறித்தும், கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.