தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் அரசியலில் வியூகம் முக்கியம் என்றும், தி.மு.க.வை தோற்கடிக்கும் நோக்கத்துடன் இருக்கும் கூட்டணியில் இணைவதுதான் சரியானது என்றும் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.