கோவை கே.ஜி. சாவடி பகுதியில் கடந்த 3ம் தேதி பொறியியல் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச் செயின் பறித்த வழக்கில், பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விவேக் (36) பாஜக பட்டியலினப் பிரிவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.