தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியதோடு, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக ஆர்ஜேடி 25, காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே பலத்தை நிரூபித்துள்ளன. ஏஐஎம்ஐஎம் 5, ஹெச்ஏஎம்எஸ் 5, ஆர்எல்எம் 4, சிபிஐ எம்எல் எல் 2, ஐஐபி 1, சிபிஐ எம் 1, பிஎஸ்பி 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி