பாஜக அறிவுறுத்தவில்லை - செங்கோட்டையன் அந்தர் பல்டி

விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு நிகழும், நல்ல முடிவாக இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜக எப்போதும் தம்மை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியது இல்லை என கூறியுள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாக கடந்த 7ம் தேதி கூறியிருந்த நிலையில் செங்கோட்டையன் இன்று (நவ.17) மாற்றி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி