பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (ஜூலை 31) அறிவித்தார். இந்நிலையில், ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த பாஜகவினர் முயற்சி செய்துவருகின்றனர். மேலும், வரும் 26ஆம் தேதி மோடியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளனர். தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை கவருவதற்காக, ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சி செய்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஓபிஎஸ்-ன் பதிலுக்காக பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.