அதிமுகவிடம் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (பிப்.26) சென்னை வருகிறார். தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 72 சட்டமன்ற தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் கொடுத்ததுள்ள பாஜக, அதிலிருந்து 35 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 35 தொகுதிகளில் அதிமுக பலமாக இருக்கும் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.