துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டாக வெற்றி பெற்றது. துருவுடன் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பா. ரஞ்சித் தயாரித்த இப்படம் ரூ.35 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், ‘பைசன்’ நவம்பர் 14 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.