நடிகர் துருவ் விக்ரம், தான் நடித்துள்ள 'பைசன்' திரைப்படத்தை தனது முதல் படமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "நான் இதற்கு முன் 2 படங்களில் நடித்திருந்தாலும், அவற்றை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், 'பைசன்' படத்தை நீங்கள் அவசியம் காண வேண்டும். இதைத்தான் என்னுடைய முதல் படமாகப் பார்க்கிறேன்" என கூறியுள்ளார். மேலும், இந்த படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் மிகுந்த உழைப்பை கொடுத்து சம்பவம் பண்ணிருக்காரு என்று தெரிவித்துள்ளார்.