பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, கோழிப்பண்ணையாளர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சில விழிப்புணர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கக் கூடாது. பொதுமக்கள் இறந்த காகங்கள் மற்றும் பறவைகளை கையுறை அணியாமல் தொட வேண்டாம். சமையலறை மற்றும் இறைச்சிக் கூடத்தில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.