மீண்டும் பறவைக் காய்ச்சல்: இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

கேரளா: ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா, கோட்டயத்தில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் அடிக்கடி பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. சமீபத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்தனர். பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி