மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு குறித்துத் தனது தொண்டு நிறுவன ஊழியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். எப்ஸ்டீன் மூலம் அறிமுகமான இரு ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்ட அவர், அதில் சட்டவிரோத செயல்கள் ஏதும் இல்லை என விளக்கமளித்தார். எப்ஸ்டீனுடன் பழகியது "மிகப்பெரிய தவறு" எனத் தெரிவித்துள்ள அவர், இதனால் ஏற்பட்ட களங்கத்திற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.