சிறுத்தை மீது மோதிய இருசக்கர வாகன ஓட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது நேரம் கழித்து எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி