சென்னை வேப்பேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் டாக்ஸி ஓட்டுநர் சம்பத் கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பு ஊபர் பைக் டாஸ்கி புக் செய்த பெண்ணிடம், தானே தினமும் பணிக்கு கொண்டுபோய் விடுவதாக கூறி அவரிடம் பரிச்சயமாகியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 31) அப்பெண்ணிடம், சம்பத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சம்பத் கைது செய்யப்பட்டார்.
நன்றி: TamilJanamNews