EMI கட்டாததால் பைக் பறிமுதல்.. ஷோரூமை உடைத்த நபர்

புதுக்கோட்டையில் EMI தொகையை செலுத்தாததால் பைக் பறிமுதல் செய்யப்பட்ட ஆத்திரத்தில் ஒருவர் யமஹா ஷோரூமில் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டையுடன் வந்த அந்த நபர், ஷோரூமின் கண்ணாடிகள் மற்றும் டெமோ வாகனங்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த வாகனங்கள் மற்றும் ஷோரூமின் இழப்புகள் குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி