கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் விபத்து.. 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் உள்ள சாமராஜநகர் பகுதியைச் சேர்ந்த சையது சரூன் என்பவர் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது, சாலையில் சென்ற மற்றொரு பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில், தனியார் நிறுவன உணவு டெலிவரி செய்யும் கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். மோதிய வேகத்தில் சரூனின் பைக் நிற்காமல் சென்று தீ பிடித்து எரிந்தது. இதில், சரூன் பலத்த காயமடைந்தார். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நன்றி: govindprataps12

தொடர்புடைய செய்தி