பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (நவ., 14) விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. காலை 11.30 மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 193, எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி 46, ஜன் சுராஜ் கட்சி 0, மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாமைக்கு தேவையான இடங்களை விட என்டிஏ கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.