பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: நிதிஷ்குமார் மகனுக்கு அமைச்சர் பதவி

பீகார் அமைச்சரவை இன்று (மே 7) விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொண்டராக தனது திறமையை நிரூபித்து அங்கீகாரம் பெற விரும்புவதாக கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்தி