பீகார்: 2 நாட்களில் மின்னல் தாக்கி 34 பேர் பலி

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக நலந்தா மற்றும் வைஷாலியில் தலா 6 பேரும், ஷேக்புராவில் 5 பேரும், பாட்னா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், நவாடா மற்றும் பங்காவில் தலா 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி