சென்னை கிண்டியில் தருண் என்ற இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்த வழக்கில் 'லாரா', 'பிரா-மேன்' போன்ற படங்களில் நடித்த நடிகையும், பிக்பாஸ் பிரபலமும் ஆன வர்ஷிணியை போலீசார் இன்று (செப்.23) கைது செய்துள்ளனர். குறும்படம் எடுக்க முதலீடு செய்யுமாறு கூறி பணம் பெற்று, மேலும் ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாக தருண் என்பவர் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட வர்ஷிணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:News18