தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் கேப்டன் டெம்பா பவுமாவை விமர்சித்தனர். குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.