தை மாதத்தை வரவேற்கும் விதமாக, மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று (ஜன.14) தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பழைய பொருட்களை அப்புறப்படுத்தியும், சிறுவர்கள் மேளங்கள் கொட்டியும் உற்சாகமாக பண்டிகையை வரவேற்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களை எரிக்க வேண்டாம் என தீயணைப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
நன்றி:News18