ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன்

ஆர்எஸ்எஸ் நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி கூறியதற்கு எதிராக அப்போது பிவாண்டியின் ஆர்எஸ்எஸ் அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பிவாண்டி நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.

தொடர்புடைய செய்தி