தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர் பகத் பாசில்

மலையாள நடிகர் பகத் பாசில் 'புஷ்பா' படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் 'டோண்ட் டிரபுள் தி டிரபுள்' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (அக்.18) தொடங்கியுள்ளது. இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி