அதிகாலையில் வரும் சூரிய ஒளி உடலுக்கு நல்லது என்று கூறுகின்றனர். ஆகையால் தினமும் 5 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் உடலைக் காட்ட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால், நமது ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் கூடும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. UV கதிர்கள் குறைவாக உள்ள சூரிய ஒளியால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சூரிய ஒளியில் நிற்பவர்கள் ஆயுட்காலம் இரண்டு வருடங்கள் அதிகரித்துள்ளதாகவும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் அபாயமும் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.