தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. தாய்ப்பால் கொடுப்பது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும். பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவை தடுக்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இதயம் பாதுகாக்கப்படுவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு. முறையாக தாய்ப்பால் வழங்குவதன் மூலம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களை வெகுவாக தடுக்கலாம்.