முருங்கை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வெறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 முதலீட்டில் தொடங்கப்படும் தேனீ வளர்ப்பு தொழில் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மருத்துவ குணம் மிக்க 'முருங்கை தேன்' சந்தையில் ஒரு கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரை விற்பனையாவதால், மிக குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபம் ஈட்ட முடிகிறது. குறிப்பாக, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் தேன் மற்றும் தேன் மெழுகு மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், இது இயற்கையை பாதுகாக்கும் ஒரு சிறந்த துணைத் தொழிலாகவும் உருவெடுத்து வருகிறது.