மதுவை எதிர்த்த பெண்ணுக்கு அடி.. யார் இந்த பாண்டியராஜன்?

தமிழக அரசு 33 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதில் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனி பட்டாலியன் கமாண்டனட் எஸ்பியாக மாற்றப்பட்டார். திருமலா பால் நிறுவன ஊழியர் நவீன் தற்கொலை வழக்கில் இவர் சந்தேகிக்கப்படும் நபராக உள்ளார். கடந்த 2017ல் திருப்பூர் எஸ்.பியாக இருந்தபோது டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பெண்ணை அறைந்து சர்ச்சையில் சிக்கினார். 2019ல் கோவை எஸ்.பி.யாக இருக்கையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை சொல்லி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

தொடர்புடைய செய்தி