நம்மில் பலர் அதிக விலை கொண்ட செல்போனை செகண்ட் ஹேண்டில் குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்துவோம். அந்த போன் திருட்டு போனா என்பதை மத்திய அரசினுடைய CEIR என்ற இணைய தளத்திற்குச் சென்று சரி பார்த்துக்கொள்ளலாம். அந்த தளத்தில் உள்ள வெப் போர்ட்டலை கிளிக் செய்து அதில் உங்களுடைய போனில் IMEI எண்ணை பதிவு செய்தால் அந்த போன் காணாமல் அல்லது திருடப்பட்ட போனா என்பது தெரியவரும். அதனை சரிசெய்துவிட்டு நமக்கு பிடித்த போனை செகண்ட் ஹேண்டில் தைரியமாக வாங்கலாம்.