பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (ஜன., 11) முதல் சென்னை மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் கூட்டம் அதிகம் கூடும் என்பதாலும், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் 14ஆம் தேதி போகி, 15ஆம் தேதி தைப் பொங்கல் கொண்டாப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது