குற்றாலம் அருவியில் 3வது நாளாக குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து 3வது நாளாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக விதிக்கப்பட்ட தடை காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையானது கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்தாலும், அருவியில் நீராட இயலாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் தூரத்தில் நின்றபடி அதனை ரசித்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி