இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத் துறை வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் சனி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். பின்னர், வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், அவர்களது கோரிக்கையை ஏற்று, அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.