வங்கி, தனியார் நிதி நிறுவன கடன் வசூல் - RBI அதிரடி

வங்கிக் கடனை வசூல் செய்யும் ஏஜெண்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது. அதில், காலை 8 மணிக்கு முன்னதாகவும், இரவு 7 மணிக்கு பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு கடன் தொடர்பாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கடன் பெற்றவரைத் தவிர அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், மிரட்டலோ தவறான வார்த்தைகளோ பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

தொடர்புடைய செய்தி