வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மார்ச் 23ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் (மார்ச் 24,25) தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.