பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நடந்து வருகிறது. இதில் வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 278 ரன்னில் அடங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 57.4 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இன்று (மே.18) நடக்கும் 3-வது நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 333 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.