‘கும்கி 2’ வெளியீட்டிற்கு தடை.. பிரபு சாலமன் தரப்பில் அவசர மனு

'கும்கி 2' திரைப்படம் வெளியீட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இன்று (நவ.14) அவர் தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  'கும்கி 2' திரைப்படம் இன்று ரிலீஸாக இருந்த நிலையில், தயாரிப்பிற்காக வாங்கிய ரூ.2.5 கோடி பணத்தை திருப்பித் தரவில்லை என சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, டிச. 3ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார். இந்த தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்த அவசர மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்தி