கோடை காலங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை?.. நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் சமீபத்தில் பயங்கர வெடி விபத்து நடந்தது. இதில், 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, ‘கோடை காலங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கலாமே?’ என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ‘விபத்துக்கள் நிகழ்வது துரதிர்ஷ்டவசமானது. தொடர்ந்து, ஏப்ரல், மே, ஜூன் போன்ற கோடை காலங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டது.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி