தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் கல்வி அல்லாத மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை மீண்டும் தடை விதித்துள்ளது. பள்ளி வளாகங்களில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் (CEO) பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டவட்டமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தந்தி