அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின் புகாரை தொடர்ந்து, அதிக சத்தத்துடன் ரேடியோ மற்றும் டேப் ரெக்கார்டர்களை பயன்படுத்த போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இரைச்சலை தவிர்க்குமாறு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு திட்டவட்டமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மீறிச் செயல்படும் பணியாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி