இருமல் மருந்து தடை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னையில் கோல்ட்ட்ரிப் இருமல் மருந்து தடை விவகாரம் குறித்து சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அக்டோபர் 1ஆம் தேதி மத்தியப்பிரதேசத்திடம் இருந்து தகவல் வந்த அரை மணி நேரத்தில் ஆய்வு செய்யப்பட்டு, வீதிமீறல்கள் கண்டறியப்பட்டது. வேதிப்பொருள் கண்டறியப்பட்டதால், அக்டோபர் 3-ம் தேதி உற்பத்தி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நிறுவனம் மூடப்பட்டது. பொதுமக்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் உட்கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி