சபரிமலை சீசனில் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும், ரயில் நிலைய வளாகத்திலும் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க ஐயப்ப பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பலரும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.