தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், படுக்கை மீது மின்விசிறி அறுந்து விழுந்த விபத்தில் குழந்தை உயிர் தப்பியது. போடி அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என நோயாளிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லை எனவும் புகார் அளித்து வருகின்றனர். அறுவை சிகிச்சை முடிந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த தாய் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
நன்றி: ThanthiTV