கொடைக்கானலுக்கு வருவதை தவிருங்கள் - மாவட்ட எஸ்.பி., எச்சரிக்கை

கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதைத் தவிர்க்குமாறு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், மலைப்பாதைகளில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕