அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் என்பது ஒரு அனிமேஷன் பேன்டஸி தொடராகும். இது மைக்கேல் டான்டே டிமார்டினோ மற்றும் பிரையன் கொனிட்ஸ்கோ ஆகியோரால் உருவாக்கப்பட்டது. நிக்கலோடியோன் அனிமேஷன் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்டது. சீனாவில் தற்காப்புக் கலைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்வருகிற ஜூன் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.